சவுதி அரேபியா கொடுத்த காயங்கள்

பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு  சென்று பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

கலேவளை – பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான இவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு நான்கு வயதில் மகள் ஒன்று உள்ள நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதிக்கு வேலை பெற்றுச் சென்றுள்ளார்.

குருநாகல் வௌிநாட்டு வேலை வாய்ப்பு துணைப் பணியகம் ஒன்றின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து தனது விருப்பத்தின் பேரிலேயே அவர் இவ்வாறு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அங்கு சென்ற அவருக்கு மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி பணி புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறும் அவர் இது பற்றி தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே அந்த வீட்டில் இருந்து வௌியேற முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவரது உடலில் பாரிய காயங்கள் பல ஏற்பட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் சம்பளம் உள்ளிட்ட ஒன்றும் வழங்கப்படாமல் கறுப்பு நிற ஆடையுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்துஇ அங்கிருந்த இலங்கைப் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டே தான் நாட்டுக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிகழ்ந்த அநீதிகளுக்கு தமக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என அப் பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

You may also like...

0 thoughts on “சவுதி அரேபியா கொடுத்த காயங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மொழி மாற்றம்

Adverticement

Loading...

Adverticement 02

விளம்பரங்கள்

 

Yarl tourism

Lanka IT School