ஜனாதிபதியை விட சிறப்பாக கவனிக்கப்பட்ட மஹிந்த குடும்பம் (படங்கள் இணைப்பு)

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பாரிய ஹோட்டலுக்கு மஹிந்த குடும்பம் நேற்று விஜயம் செய்துள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ளூயபெசi-டுய ஹோட்டலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.

இதன்போது Shangri-La ஹோட்டலுக்கு அழைக்கப்பட்ட மஹிந்த அங்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மைத்திரிக்கு இணையாக மஹிந்தவும் மீண்டும் ஹோட்டலை திறந்து வைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நேற்று இரவு மஹிந்த உட்பட குடும்பத்தினருக்கு இராப்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரபல சீன உணவுகள் உட்பட பல பாரம்பரிய உணவுகள்இ பெறுமதியான மதுபானங்கள் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது சீனாவின் மிகவும் நெருங்கிய நண்பரான மஹிந்தவினால் குறித்த ஹோட்டல் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

You may also like...

0 thoughts on “ஜனாதிபதியை விட சிறப்பாக கவனிக்கப்பட்ட மஹிந்த குடும்பம் (படங்கள் இணைப்பு)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மொழி மாற்றம்

Adverticement

Loading...

Adverticement 02

விளம்பரங்கள்

 

Yarl tourism

Lanka IT School