Friday, March 9, 2018

கொழும்பு இரத்மலானையில் துப்பாக்கி சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில்

கொழும்பு - இரத்மலானை பகுதியில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு  இரத்மலானையில் துப்பாக்கி சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஆபத்தான நிலையில்

SHARE THIS

Author: