Saturday, April 7, 2018

இன்றைய ராசிபலன் 07-04-2018


மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.




ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.




மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி
யடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.




கடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.




சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.




கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.




துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.




விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.




தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.




மகரம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.




கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.




மீனம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

SHARE THIS





Author: