Sunday, April 15, 2018

இன்றைய ராசிபலன் 15-04-2018

மேஷம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், ஆதாயம் தருவதாகவும் அமையும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். உறவினர்களுடன் பேசும்போது வீண் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம்: இன்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவேண்டாம். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்றி மகிழ்வீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.

தனுசு: மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு தேவையற்ற வீண்செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மீனம்: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பம் தொடர்பான எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.


SHARE THIS





Author: