கருணாநிதி கவலைக்கிடம்.! வெளியானது காவேரியின் அதிகாரபூர்வ அறிக்கை.!!

கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை இதுவரை அறிக்கை வெளியாகவில்லை.

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிறகு, 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இன்று தகவல் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற முறை போலவே மாலை நேரத்தில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.

மு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்தார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு திருநாவுக்கரசர் வருகை தந்தார்.

காவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார். கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார்.

பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாலேயே இன்று தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனையை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் போலீசாரும் குவிக்கபட்டு வருகின்றனர்.

திமுகவின் முக்கிய தலைவர்களும் காவேரி மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதில், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கருணாநிதியின் தனி மருத்துவர் கோபாலும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், சற்றுமுன் காவேரி மருத்துவமனை, ”திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், கருணாநிதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.” என்றும் அறிக்கை வெளிட்டுள்ளது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.