லண்டனிலிருந்து யாழ் சென்ற பெண் மரணம்! விபரங்களை வெளியிட்ட பொலிஸார்

யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து இருந்த சென்ற வாகனம் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக லண்டனிலிருந்து சென்ற பெண் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

லண்டலிருந்து தாயகம் சென்ற 47 வயதான சுதாகரன் பிரசாந்தினி மற்றும் அவரின் உறவினரான 42 வயதான லூயிஸ் அன்ரனிஸ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

லண்டனில் இருந்து வந்த மகளை கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளனானது.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like