கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரர்

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள பல மக்களிடம் கோடி கணக்கில் பணம் மோசடி செய்த அஹுன்கல்ல விகாரையின் தேரரே மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக குறித்த தேரர் விகாரையில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

அஹுன்கல்ல, கல்வேஹேர மவலுவவத்தை விகாரையில் பணியாற்றும் இந்த தேரர், தான் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக செயற்படுவதாக குறிப்பிட்டு பிரதேச மக்களை ஏமாற்றியுள்ளார்.

விகாரைக்கு வரும் நபர்களின் மனதை மிகவும் நுட்பமான முறையில் மாற்றி ஏமாற்றியுள்ளார்.

அஹுன்கல்ல, பதுளை, வெல்லவாய, பண்டாரவல, கினிகத்ஹேன, அவிசாவளை, வெலிகம, கித்துல்கம, கண்டி, பல்லேகலை பிரதேசத்தை சேர்ந்த 150 பேரை ஏமாற்றி 8 கோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென காணாமல் போன குறித்த தேரரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.