96 வயதில் தேர்வெழுதிய மூதாட்டி…

கேரளாவில் மூதாட்டி ஒருவர் தனது 96 வயதில் தேர்வெழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு பள்ளிக்கூடம், காலேஜ் போவது என்றாலே அலர்ஜி. அதிலும் முக்கியமாக தேர்வு என்றாலே அவர்களுக்கு கடுப்பு தான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவர் இன்றைய இளம் தலைமுறையிருக்கு முன்னுதாரணமாய் திகழ்கிறார்.

கேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் ஏராளமான முதியவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கேரளா முழுவதும் 40 ஆயிரம் முதியோர்கள் தேர்வு எழுதினர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். அருகிலிருந்த 76 வயது முதியவர் ராமச்சந்திரன் மூதாட்டியின் பேப்பரை பார்த்து காப்பியடித்து எழுதிக்கொண்டிருந்தார். இதனைபார்த்த தேர்வு கண்காணிப்பாளர் முதியவர் ராமச்சந்திரனை கண்டித்தார்.

அத்தோடு புத்தகங்கள் படிக்கும் தேர்வில் மூதாட்டி கார்த்தியாயினி 30க்கு30 மதிப்பெண் பெற்றார்.

இது நமக்கு நகைச்சுவையாக இருந்தாலும் கூட, 96 வயதில் மூதாட்டி ஒருவர் தேர்வெழுதியது மிகப்பெரிய விஷயம். மூதாட்டி இதுவரை உடம்பு சரியில்லை என மருத்துவமனைக்கு சென்றதில்லை. பார்வை குறைபாடு காரணமாக மட்டும் ஆபரே‌ஷன் செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் நான் தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்வது தான் என மூதாட்டி கார்த்தியாயினி உத்வேகத்துடன் கூறினார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like