35 வருட நண்பருக்காக, டாக்டர் இராமதாஸ் அதிரடி முடிவு., திமுக தொண்டர்கள் உற்சாகம்.!!

இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கருணாநிதிக்கு மருத்துவ குழு தீவிர சிகிச்சை கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது.

நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதிக்கு உடல் நிலை மிக மோசமான நிலையை எட்டியதாகவும், அவரின் உடல் உறுப்புகள் இயங்க வைப்பது சிக்கலாக உள்ளதாகவும் தெரிவித்தது. இதனால் திமுக தொண்டர்கள் உச்சகட்ட சோகத்தில் கத்தி கதரி அழ ஆரம்பித்தனர்.

காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக இறுதி அறிக்கையை வெளியிட்டது. அதில் மாலை 6.10 மணிக்கு கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

நேற்று, மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முக அழகிரி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மு.க. ஸ்டாலின் தலைமையில் குடும்பத்தினர் முதலமைச்சரிடம் வலியுறுத்திருந்தனர். 5 முறை முதலமைச்சராக இருந்தவருக்கு உரிய கவுரவம் அளிக்கவும் கேட்டனர்.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றார். முன்னதாக இது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது வழக்குகள் இருப்பதால் மெரினாவில் இடம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.

கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார். அண்ணா நினைவகத்தின் அருகே கலைஞரை அடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தேசிய தலைவராக கருதப்படும் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனையடுத்து, மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் திமுக முறையீடு செய்தது. இந்த மனுவை இரவு 11.30க்கு விசாரிக்க நீதிபதி விசாரணை நடந்தது.

இதற்கிடையே, பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை திரும்ப பெறுவதாக மனு அளித்துள்ளார்.

அப்போது, அண்ணா சமாதி இடம் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வரவில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 4 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் துரைசாமி மனு அளித்துள்ளதாக பேட்டி அளித்தார். மேலும் பாமக போட்ட வழக்கையும் வாபஸ் வங்கியுள்ளதால், கருணாநிதி சமாதி அமைவதற்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றும், இனி யாரும் தடுக்க முடியாது எனவும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக தோண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.