இன்றைய ராசிபலன் 09-08-2018

மேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
ரிஷபம்: இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
கடகம்: எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்: உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும்.
துலாம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.
விருச்சிகம்: இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
தனுசு: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவி கேட்டு வருவார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மகரம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். லாபமும் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
கும்பம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்

Get real time updates directly on you device, subscribe now.