இன்றைய ராசிபலன் 10.08.2018

மேஷம்: காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்: மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் உதவி கேட்டு வருவார். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.
கன்னி: அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
விருச்சிகம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்குக் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு: புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் கடனாக எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.
மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு குடும்பப் பொறுப்பின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.