இன்றைய ராசிபலன் 11-08-2018

மேஷம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உடல்நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கப்பெறும்.
ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீண் செலவுகளும் ஏற்படக் கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.
சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கன்னி: பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்: புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வருகையால் பரபரப்பாகச் செயல்படவேண்டிய நிலை ஏற்படும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு: இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மீனம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like