ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்!!

கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்று தனது இறையாக்கியுள்ளது. ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது இரையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தொடர்பாக பொலிஸாரிடமும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியதில் எந்த பயனும் கிடைக்கவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.