கணினியை கொழும்பில் தொலைத்து, வீதியில் பதாகையுடன் நின்ற சீனப் பிரஜை: ஒப்படைத்த சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மனிதாபிமானத்தை வென்ற சம்பவமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையில் வைத்து, சீனப்­பி­ரஜை ஒரு­வ­ரினால் தவ­ற­வி­டப்­பட்ட மடிக்­க­ணி­னி, இலங்­கை­யி­லுள்ள பேஸ்புக் நண்­பர்­களின் உத­வி­யுடன் அவ­ரிடம் மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சீனப்­பி­ரஜை அண்­மையில் கொழும்பில் முச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்த போது, அதில் தனது மடிக்­க­ணி­னியை தவ­ற­விட்­டுள்ளார்.

தனது தொழி­லுடன் தொடர்­பு­டைய முக்­கி­ய­மான ஆவ­ணங்கள் அடங்­கிய மடிக்­க­ணினி தவ­ற­வி­டப்­பட்­ட­மை­யினால் மிகவும் அசௌ­க­ரி­யத்­துக்­குள்­ளான குறித்த சீனப்­பி­ரஜை, சில இளை­ஞர்­களின் உத­வி­யுடன் “எனது கணினி தொலைந்­து­விட்­டது.

அதனை மீட்­டுத்­த­ரு­ப­வர்­க­ளுக்கு சன்­மானம் வழங்­கப்­படும்” என்று சிங்­கள மொழியில் எழு­தப்­பட்ட பதா­கை­யொன்றைத் தாங்­கி­ய­வாறு கொழும்பு, கங்­கா­ராம பிர­தே­சத்தில் நின்­றுள்ளார்.

இதனை பார்த்த சில இளை­ஞர்கள் அக்­காட்­சியைப் படம்­பி­டித்து பேஸ்­புக்கில் பதி­விட்­ட­துடன், மேற்­படி சீனப்­பி­ர­ஜையின் தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இந்தப் பதிவு பலரால் பரி­மா­றப்­பட்டு, இறு­தி­யாக மடிக்­க­ணினி தவ­ற­வி­டப்­பட்ட முச்­சக்­க­ர­வண்­டியின் சார­தியின் கைக­ளுக்கு கிட்­டி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து, அச்­சா­ரதி சீனப்­பி­ர­ஜையை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு அவ­ரது வீட்­டுக்குச் சென்று மடிக்­க­ணி­னியை கைய­ளித்­துள்ளார்.

தனது கணினி கிடைத்த சந்­தோ­சத்தில் அவ்­வெ­ளி­நாட்­டவர், சார­திக்கு 30 ஆயிரம் ரூபாவை சன்­மா­ன­மாக வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன், தனது மடிக்­க­ணினி திருப்­பிக்­கி­டைப்­ப­தற்கு உதவி செய்த இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், முச்சக்கரவண்டி சாரதியுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் குறித்த சீனர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.