வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி- சில மணி நேரத்தில் குழந்தை பிரசவிப்பு!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் ஆலுவா என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பனிக்குடம் உடைந்த நிலையில் ஒரு பெண் தவித்து வருவதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர்.

மீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணின் பெயர் சஜிதா ஜபீல் என்பதும், 25 வயது சஜிதாவும் அவரது அழகிய ஆண் மகனும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர். மீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணின் பெயர் சஜிதா ஜபீல் என்பதும் 25 வயது சஜிதாவும் அவரது அழகிய ஆண் மகனும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like