இன்றைய ராசிபலன் 20-08-2018

மேஷம்: இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக் கூடும்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினகள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: புதிய முயற்சி சாதகமாக முடியும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

கடகம்: காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் அடிக்கடி சோர்வு ஆட்கொள்ளும். பிற்பகலுக்கு மேல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறிய அளவில் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமார்தான். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். மாலையில் குடும்பத்தினருடன் நண்பர் அல்லது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: அரசாங்கக் காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயற்சி செய்யவும். வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் செலவுகளுடன் உற்சாகம் ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.

விருச்சிகம்: மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகளால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வருமென்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்: சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங் கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடிவரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.