மன்னாரில் காணாமல் போன குடும்ப பெண்! கதிகலங்கி தவிக்கும் பெண்ணின் 3 குழந்தைகளும் கணவரும்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் அன்றைய தினம் இரவு சிலாபத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

33 வயதுடைய ஏ.லூர்து சுறாங்கனி எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணமல் போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து முருங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் கணவர் சிலாபத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய ஏ.லூர்து சுறாங்கனி என்பவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸிடம் தகவல் கொடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.