இன்றைய ராசிபலன் 26-08-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

<strong>ரிஷபம்: தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கடகம்: இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாயின் தேவையை நிறைவேற்றும் வகையில் செலவு செய்ய நேரிடும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சிம்மம்: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்: பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். முக்கியமான முடிவு எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

விருச்சிகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு: தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால்பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்: எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மீனம்: உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.