முல்லை நில ஆக்கிரமிப்பு எதிரான போராட்டத்திற்கு ஈரோஸ் ஆதரவு!

முல்லை நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரோஸ் ஆதரிக்கும்
பொதுச் செயலர் துஸ்யந்தன்

தமிழர் வாழ்விடங்களை திட்டமிட்டு கையகப்படுத்தும் நல்லாட்சியின் துரோகத்தனங்கள் நாளாந்தம் தொடரும் சூழ்நிலை அன்மைக் காலங்களில் அதிகரித்து செல்வதை நாம் அவதானித்துக் கொண்டு வரிகிறோம் 
 யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்.

முற்றுப் பெறாத நிலையில் தமிழ் மக்களின் பூர்வீகமான நிலங்கள் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள மயமாக்கள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது.
 திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் படிப்படியாக புற்று நோய் போல் பரவி தமிழர்களது இதய பூமியான மணலாறு தொடங்கி முல்லைத்தீவு ஈறாக வழுங்கிக் கொண்டு போவதை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

நல்லாட்சியின் பேரினவாத கோரமுகம் இப்பொழுது தெளிவாகவே வேலை செய்கிறது. தமிழர்களது தொன்மைமிகு நிலங்கள் அரச இயந்திரங்களினால் திட்டமிடப்பட்டு அபகரிக்கப்படும் நடவடிக்கயானது வாழ்வியல் சமநிலையினை சிதைக்கும் .யுத்தத்தின் பின்னரான காலத்தில் அமுல்படுத்தப்பட்ட பிம்சவிய காணி உரிமம் தொடர்பான செயத்திட்டம் கூட வழக்குகளினால் இடை நிறுத்தப்பட்டதை நினைவூட்ட விரும்புகிறோம் ஆனால் அரசு இவ்வாறான ஆக்கிரப்பின்மூலமாக இன ரீதியான விகிதாசாரத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தி தமிழர்களை அரசியல் ரீதியாக பலகீனப்படுத்தும் ஒரு தந்திரமான நடவடிக்கையாகவே இதனை ஈழப் புரட்சி அமைப்பு கருதுகிறது.
 எனவே அன்புக்குறிய தமிழ் மக்களே எமது நிலம் எமக்கே என்ற கொள்கையிலிருந்து நாம் பின்வாங்கி விடமுடியாது.

எனவே எதிர்வரும் 28.08.2018 இல் முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு மரபுரிமைப் பேரவை ஏற்ப்பாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு எமது நிலத்துக்கான உரிமைக்கு ஓங்கிக் குரல்கொடுப்போம்.என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்