இரண்டாம் மனிதனின் கைக்கோல்

இரண்டாம் மனிதனின் கைக்கோல்

பரிசாய்……..

யான் காகிதத்தில் கிறுக்கியவற்றையும் கவிதையென இரசித்து என்னை முதன் முதலில் கவிஞராய் கண்ட கவிதைகளாம் என்
அன்புத் தோழிகளுக்கு என் முதற்கவிநூல் பரிசாய் சமர்ப்பணம்.


என்னுரை

இது என் கன்னிப்படைப்பு. உலகத்தின் எந்தவொரு சம்பவத்துடனும் மூவகை மனிதர்கள் சம்பந்தப்படுகிறார்கள். முதலாமவர்பிரச்சனையை உருவாக்குகிறார். இரண்டாமவர் பிரச்சனையை எதிர்நோக்குகிறார். இவற்றையும் தாண்டி வெளியில் இருந்து பார்க்கின்ற மானுடர்களும் இருப்பார்களாயின் அவர்கள் மூன்றாம் மனிதர்கள். இவ்வாறாய படியால் நான் சமூகத்தின் பிரச்சினைகளை அல்லது சொந்த பிரச்சினைகளை வரியின் வழி கவி வடிவில் தருகின்ற போது பெரும்பாலும் இரண்டாம் மனிதனாகவே உங்களுக்கு தென்படுவேன். ஆகையினால் இத்தொகுதியினை அப்பெயர் கொண்டு உருவாக்கினேன். இதுவே ‘இரண்டாம் மனிதனின் கைக்கோல்‘. சிறியேனின் மனத்திரையில் விழுந்த சில சிந்தனைகளின் படி என் கைக்கோல் சிந்திய மையே இக்காகிதங்களை நனைத்து நிறைத்தது. ஆக தவறுகள் இருப்பின் தயை கூர்ந்து மன்னிக்கவும். இவை ஒவ்வொன்றும் என் ஊடாக இந்த சமூகத்தை உங்களுக்கு விளக்கலாம். நிஜமான சமூகத்தைக் காட்டிலும் கற்பனை உலகம் இரம்மியமானதாயும் காட்சிகளை சீரமைக்க கூடியதாயும் உள்ளமையையே பெரும்பாலும் என் கவிதைகள் சொல்லுகின்றன. இவை பல கோணங்களில் சென்று வரும். புடிக்கின்ற பேர்து விளங்கிக் கொள்வீர்கள். இங்கும் என் உரையை கவி வடிவில் தருகின்ற போது அதற்கென பொருட்திரிபு வருமெனக் கருதியே இங்கு உரைநடையை கையாள்கிறேன். தங்கள் ஒவ்வொருவரின் இரசனையும் விமர்சனமும் எனக்கு பயன்பட ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை நூலாக்கினேன்.

 என்றோ ஒருநாள் எண்ணங்கள் பலிக்கும்

கனவினையும் காணொளியாக்கிட எண்ணியமனம் தினம் காதலிப்பதை கரைசேர்க்க எண்ணுகிறது.

எண்ணத்தின் வண்ணம் வானவில்லாயினும் நிதர்சனம் கறுப்புக் கண்ணாடி கொண்டே பார்க்கிறது.

ஏக்கமும் தவிப்பும் தாராளமாய் கிடைக்கின்ற இடத்தில் ஏற்றம் காண எண்ணுகின்றவர்கள் ஏமாளிகளே !

எத்தனை காலம்தான் இந்தப் பாசாங்கு வித்தைகள்? …………………………………………

ஓவ்வொருவர் மனதின் ஓரமாய் கிடைக்கின்ற பட்டாம்பூச்சி கனவுகளை கதைகளாக்கி

பின் காணொளி யாக்கிட காலம் பிறக்கும்.

அறிவியலின் அதிகனதியால் ஒவ்வொருவர் கப்பலும் பயணிக்கும்

வெற்றிக் கலங்கரை நோக்கி காப்புறுதி வசதிகள் செய்து தரப்பட்டால்…

கதிர்


 எட்டாக்கனி புளிக்கும்…..!!!

சலுகை வேண்டாம்

சாவிலும் தமிழ் படித்து சாம்பலிலும் தமிழ் மணந்து சாவோம் என்று

எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் வீரராய் இருந்தனர் அன்று ஒவ்வொரு நாளும் பேச்சுக்களில்…

எம் வீரர் மூச்சுக்கள்… பட்டமும் பதவியும் வந்து பஷ;பமாக்கியது உணர்வை பழையபடி

சலுகைக்காய் நாடி ஓடிடும் பரம்பரை புத்தி பவ்வியமாய் ஒட்டிக் கொண்டது. அப்போதுதான் யாமறிந்தோம் !

பேச்சுப்பேச்சாய் தான் இருக்குமென்று அன்று ‘சலுகை வேண்டாம்’ என்றது எட்டாக்கனி புளிக்கும் என்றுதானோ !

கதிர்