என்ன சொல்ல….!

 

தணியாத தீயை தணிவிப்பாய்

தீண்டாமை எனும் நீ அணைந்தாலும் தணலாக எரிபற்று நிலையோடு தான் இருக்கிறது.

ஏனென்றால் இன்னும் சிலரை சுடுகிறதல்லவோ !

மாறிவிட்டோம் என்று மார்தட்டி கொண்டும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றமை தாம் மாமனித தன்மை என்று

மணிக்கு நூறுமுறை நினைத்தாலோ பேச்சளவில் சமரசம் தானே…..

மனதளவில் தான் சாதியத்தை மறந்து வந்த பெருந்தகை என்ற பெருமை இருந்தால் பிறகேன் ஒழித்தாய் பொய்வேஷம்.

சாதியத்தில் இருந்து மீண்டு வந்தது சாதனையில் சாக்கடையிலிருந்தெழுந்த தற்காப்பே உயர்வு தாழ்வென்ற பேதமையை மறந்தது

தெய்வீக பண்பல்லவே மனிதத்தின் முதல்படி எல்லோரும் ஒன்றென உணர்ந்து வாழ வரும் போது சாதியத்தை மறந்து வராதீர்

புதிய மனிதனாய் பிறந்து வாரும் புதிய உலகிற்காய்

கதிர்


 என்ன சொல்ல….!

பெண்ணே !

நிலவென்று சொல்வதால் உன்னில் கறையென்றாமோ !

அன்பே !

தேன் என்றால் தெவிட்டுவாய் என்றாமோ !

உன்னைப் பால் என்று சொல்வதால் காலத்தாற் கெடுவாய் என்றாமோ !

உன்னை கடல் என்றால் கரிப்பாய் என்றாமோ !

என் உயிர் நீ என்றால் என்றோ மரிப்பாய் என்றாமோ !

உன்னை இறை என்றால் நீ பந்தங்களற்றவளாய்

அப்போ நான் உன்னை தேவதை என்றால் அவர்களும் உன்போல் அன்பானவர்கள்தாமோ?

அப்போ உனை என்ன சொல்ல…..

கதிர்


நண்பிகளுக்காய்……

அணுவைத் தொடர்ந்து பிளந்து செல்கையில் உள்ளே கடவுள் துணிக்கைகள் உள்ளனவாம்

எம் கல்லூரியின் ஒவ்வோர் துகளையும் துருவித் துளையுங்கள்……. நட்பின் துணிக்கை காண்பீர்.

டீபை டியமெ வெடிப்பு விதி பூமி தோன்றிய கதைகளும் மெய்ப்பிக்கப்படலாம்.

எங்கோ பிறந்து வளர்ந்த எல்லோரும் புலமைப்பரிசில் எனும் பெருவெடிப்பில் சிதறியே கூடினோம்

இங்கு எதை காண்கினும் நட்பின் சாரல் தெரிகிறது….. விஞ்ஞான விந்தைகளுக்குள் அகப்படாத விருப்பிற்குரிய உறவு நாமே

தேடி சென்ற நல்லதோர் நந்தவனம்…..

கதிர்