விரட்டி விரட்டி வீடியோ எடுத்த தமிழ் ஊடகவியலாளர்!

வவுனியா வடக்கு பிரதேசத்தில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து செய்தி செளகரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வுப்பிரிவை சேர்ந்த நபரை ஊடகவியலாளர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

காஞ்சிம்மோட்டை காட்டுப்பூவரசன்களத்தில் பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்கள் தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு வன இலாகாவினர் தடை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் குறித்த மக்களின் இன்னல்களை தொடர்பில் ஆவணப்படம் ஒன்றினை எடுப்பதற்காக வவுனியா ஊடகவியலாளர் இன்று குறித்த பகுதிக்கு சென்றிருந்ததுடன் அம் மக்களின் பிரச்சனைகளை ஆவனப்படுத்திக்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு வந்த இராணுவ புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் ஊடகவியலாளரை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டிருந்தார்.

இதனால் சிரமத்திற்குட்பட்ட ஊடகவியலாளர் தனது பணியை நிறுத்திவிட:டு குறித்த புலனாய்வுத்துறையை சேர்ந்தவரை வீடியோ எடுத்தவாறு நீங்கள் யார்? கூறுங்கள் என ஊடகவியலாளர் கேட்டபொது அதனை சற்றும் எதிர்பாராத புலனாய்வுப்பிரிவை சேர்ந்தவர் அங்கிருந்து தப்பி தனது ஏனைய சகாக்களுடன் அங்கிருந்து சென்றிருந்தார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர் தனது பணியை நிறைவுசெய்து குறித்த பகுதியில் இருந்து வவுனியா சென்றிருந்தார்.