சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம்!! அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டன அறிக்கை!!

சிவ­னொ­ளி­பாத மலைக்கே உரித்­தான பெயரை மாற்றி புத்­தரின் பாதஸ்­தா­ன­மாக நிலை­யான பெயர்க்கல் பதித்­தி­ருக்கும் செயற்­பாடு அநா­க­ரி­க­மா­னது.

அது மட்­டு­மன்றி கண்­டிக்­கத்­தக்­கதும் விச­னத்­துக்­கு­ரி­ய­து­மாகும்.

இப்­பெ­யர் ­மாற்றம் உட­ன­டி­யாக இரத்துச் செய்­யப்­பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் மாமன்­றத்தின் பொதுச் செய­லாளர் வே.கந்­த­சாமி விடுத்துள்ள கண்­டன அறிக்­கையில்,

இலங்கை வாழ் இந்துக்களுக்கு அதிர்ச்சி தரும் விடயம் சிவனொளிபாத மலையின் பெயர் மாற்றம்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக இந்­துக்கள் மீதும் இந்­து­ ம­தத்தின் மீதும் பல்­வேறு விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்­பது நாம் அனை­வரும் அவ­தா­னித்து வரு­கின்ற ஒரு பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

சிவ­னொ­ளி­பாத மலை தொடர்பில் ஒவ்­வொரு மதத்­தி­ன­ருக்கும் ஒவ்வொரு நம்­பிக்கை உள்­ளது.

அவை யாவற்­றையும் இந்­துக்கள் மதித்தே நடந்து வந்­தனர்.

ஆனால் கடந்த 2016 இல் இப் பெயர்ப் பல­கையில் காணப்­பட்ட அடம்ஸ்பீக் என்ற பெயர் அழிக்­கப்­பட்டு ஆங்­கி­லத்­திலும் ஸ்ரீபாத என்றே எழு­தப்­பட்­டது.

அதன் தொடர்­வி­னை­யாக இவ்­வ­ருடம் சிவ­னொ­ளி­பாதம் என்னும் பெயர் அழிக்­கப்­பட்­டது.

மட்­டு­மின்றி ஒட்­டு­மொத்தமாகவே இந்­துக்­களின் நம்­பிக்கை, மத சுதந்திரம் என்­பன வெளிப்­ப­டை­யாக அழிக்­கப்­பட்டு கௌதம புத்­தரின் பாதஸ்­தானம் என்றே 3 மொழி­க­ளிலும் பதிக்­கப்­பட்ட நிலை­யான பெயர்க்கல் அங்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அநா­க­ரி­க­மான செய­லுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வன்­மை­யான கண்­ட­னத்தைத் தெரி­வித்­துக்­ கொள்­கி­றது.

இப்­பெயர் மாற்றம் தொடர்பில் கடந்த 2017ம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் ஹிரு செய்தி இணை­யத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள செய்­தியில்,

இரத்­தி­ன­புரி பிர­தேச செய­லகம் வெளி­யிட்­டுள்ள செய்­தி­க் கு­றிப்­பின்­படி சிவ­னொ­ளி­பாத மலையின் பெயரை கௌதம புத்­தரின் ஸ்ரீபாதஸ்தானம் என மாற்­று­வது தொடர்­பாக எமக்கு ஒரு திட்ட முன்மொழிவு கிடைக்­கப்­ பெற்­றுள்­ளது.

அது தொடர்பில் ஆராய்ந்து அரச வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்து அதன் பெயரை மாற்­று­வது தொடர்பில் நாம் நட­வ­டிக்கை எடுப்போம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது ஒரு தேசிய இனத்தின் சுதந்­தி­ர­மான மத நம்­பிக்­கையை அவமதித்து எதேச்­சா­தி­கா­ர­மாக ஒரு தேசிய பொதுச் சொத்தின் மீது இப்­பி­ர­தேச செய­லகம் எடுத்த முடி­வையும் நாம் வன்­மை­யாகக் கண்டிக்கின்றோம்.

ஆனாலும் இது­வ­ரையில் அப்­பெயர் மாற்றம் தொடர்பில் அரச வர்த்தமானி அறி­வித்­த­ல்கள் ஏதேனும் வெளி­வந்­துள்­ள­தாக எனது புலனுக்கு எட்­டி­ய­வ­ரையில் தெரி­ய­வில்லை.

அவ்­வா­ற­தொரு அரச அறி­வித்­த­லின்றி ஒரு தேசிய பொது உடமையை பெயர் மாற்­றி­யி­ருந்தால் அவ்­வா­றான நட­வ­டிக்கை சட்டவிரோதமானதே என நாம் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றோம்.

எனவே சம்­பந்­தப்­பட்ட அனைத் துத் தரப்­பி­ன­ரி­டமும் இப் பெயர்­மாற்றம் உட­ன­டி­யாக இரத்துச் செய்­யப்­பட்டு பழை­ய­படி சிவ­னொ­ளி­பாத மலை என்று தமி­ழிலும் குறிப்­பிடுமாறும்,

இவ்­வா­றான இனச்­ சம­நி­லையை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அறிந்து சட்­டத்­தின்­படி தண்­டிக்­கு­மாறும் இலங்கை வாழ் இந்­துக்­களின் பிர­தி­நி­தி­யாக மாமன்றம் விடுக்கும் வேண்­டு­கோ­ளாகும்.

அத்­துடன் எதிர்­கா­லத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அவை இந் நாட்டின் சமத்துவத்துக்கும் பன்மைத் தன்மைக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் என்பதுடன்,

அரசால் மேற் கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்து வதுடன் அரசின் மீது தமிழ் மக்க ளின் நம்பிக்கையை இழக்கும் நிலை

ஏற்படும் என்பதையும் அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.