இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நடக்கும் வித்தியாசமான கொள்ளை!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பொலிஸார் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த அபராதம் நியாயமற்ற முறையில் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த இளைஞர் ஒருவரே தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போலியாக குற்றம் சுமத்தி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் அதிக வேகத்தில் பயணிக்கவில்லை எனினும் அவ்வாறு போலியாக குற்றம் சுமத்தி போக்குவரத்து பொலிஸார் மோசடியில் ஈடுபடுவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.