பயங்காரவாத குற்றச்சாட்டில் வெளிநாட்டில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர் கைதானார்.

எனினும் இந்த விடயத்தின் பின்னர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்து 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like