இலங்கை கடலில் அதிசயம்! வல்லரசுகளால் ஆபத்து

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் உள்ள பெற்ரோலிய வளங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வு திட்டத்தின் கீழ் கடல் பரிமாண நில அதிர்வு தரவுகள் சேரிக்கும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

BGP Pioneer என்ற கப்பல் இந்த பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பெற்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடம்பெறுகிறது.

இதேவேளை, மன்னார் உள்ளிட்ட கடற்பரப்பில் பெற்றோலிய வளம் உள்ளமை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலதிக பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகிறது.

இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவு பல்வேறு அதிசய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இலங்கையை தன்னகத்தில் வைத்திருக்க அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் போட்டி போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.