வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!

இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

என்றும் இல்லாத அளவிற்கு ரூபாய் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அந்த வகையில், மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 162.7870 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் இந்த அளவிற்கு டொலர் வீழ்ச்சியை சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.