வீதி வீதியாக கவிழ்ந்து கிடக்கும் சிங்களவர்கள்!

இலங்கையின் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களில் எண்பதுக்கும் அதிகமானோர் குடிவெறியில் நிலைதழும்பிய நிலையில் வீதிவீதியாக விழுந்து கிடந்தமை கொழும்பில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்‌ஷ குழுவினர்க்கு கிடைத்த மாபெரும் பின்னடைவாக இது அமைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று எழுதியுள்ளது.

அரசுக்கு எதிரான இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கணிசமான நபர்கள் காசுக்காகவும் சாராயத்துக்காகவும் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுளது.

குறிப்பாக வீதி வீதியாக நிதானமிழந்து போதையில் வீழ்ந்துகிடந்த நபர்களால் தென்னிலங்கை அரசியல் அதிர்கிறது.

பேரணி முடிவடைந்தும் பெருமளவான ஆதரவாளர்கள் மிகுந்த போதையில் நின்று வீதியில் செல்வோரை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் மனித நாகரிகத்துக்கே முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் அந்தக் குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள இந்த விடயம் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர்க்கு மிகப்பெரும் பின்னடைவைக் கொண்டுவந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.