ஒரு கோடிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்து 01 கோடி 50 இலட்சத்து 50 ஆயிரத்து 170 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.

சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக லிபியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாத்திரைகளும் 225 மில்லி கிராம் டெமடோல் வகையைச் சேர்ந்தது என்றும், அவற்றின் பெறுமதி சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.