தென்னிலங்கை அரசியலை ஆட்டங்காண வைத்த புகைப்படம்!

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற நிலையில் நள்ளிரவுக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போது கொழும்பு நகரம் தனது இயல்பு நிலையை பெற்றுள்ளது.

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், மஹிந்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவசர செய்தி என குறிப்பிட்டு மஹிந்தவின் புகைப்படம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றுவதுடன் அடுத்த பிரதமராக மஹிந்தவை நியமிப்பதே கூட்டு எதிர்க்கட்சியின் இலக்காகும். இதனை செயற்படுத்தும் வகையில் கொழும்பு நகரை முடக்கும் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.