அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!!

அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றய நாணய மாற்று வீதம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 163.5780 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.