தொடர் வீழ்ச்சியில் ரூபாவின் பெறுமதி! தடுக்க முடியாமல் திணறும் அரசாங்கம்

கடந்த வாரத்தில் இலங்கையின் வெளிநாட்டு கடன் அளவு 34 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 162 ரூபாய் முதல்163 ரூபாய் வரை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதி ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாகவும், இலங்கையின் வெளிநாட்டு கடன் 340 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் ரூபாயின் பெறுமதி 33 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமையாளர் மற்றும் நிதி பீடத்தின் சிரேஷ்ட பேச்சாளர் எம்.டீ.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.