வறுமையின் மத்தியிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுமி….!!

இலங்கையில் வறுமையான நிலையிலும் சாதிக்க துடிக்கும் சிறுமி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.தம்புளை அருனோதயகம பிரதேசத்தில் வாழும் ஹன்சிக்கா பிரியதர்ஷனி என்ற சிறுமி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹன்சிக்கா, குடும்ப சுமை சுமப்பதாகவும், அதனோடு கல்வி கற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தாய் குடும்பத்தை விட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலை, குடும்பத்தின் மூத்த மகளான ஹன்சிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

கல்விக்கான நேரத்தை விடவும் குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டிய நிலை ஹன்சிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.கூலி வேலை செய்யும் தந்தை கொண்டு வரும் பணத்தில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை அவர் மேற்கொண்டு வருகிறார்.

பாதுகாப்பான வீடு கூட இல்லாத நிலையில் இரு சகோதரர்களுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.இரவு உறங்குவதற்காக அயலவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஹன்சிக்காகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் வாழும் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் கிடையாது. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற போராடி வருகின்றார்.

சகல வசதிகளையும் கொண்ட குடும்பங்களில் பிள்ளைகள் பொறுப்பற்ற நிலையிலும், கல்வியில் அதிக ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகிறது.இவ்வாறான நிலையில் ஹன்சிக்காவின் விடாமுயற்சியும், கல்வி மீதான ஆர்வமும் பலரையும் நெகிழ செய்துள்ளது. இவரின் கல்வி நடவடிக்கைக்காக உதவிகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.