புலிகளின் தலைவர் பிரபாகரனை விஷம் வைத்துகொல்ல நினைத்ததில்லை!

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து அவரை கொலைச் செய்ய தாம் ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனபலய” பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பால் பக்கற்றில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையினால், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

இதேவேளை, ஆடை தொழிற்துறையினர் மீது சுமத்தப்படவுள்ள வரம்பற்ற வரிக்கு எதிராக எதிர்வரும் 15ம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் நாட்டு மக்களை வீதிக்கு இழுத்துச் சென்ற வண்ணம் உள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.