பிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கை தமிழ் பெண்..!!

சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்திய அவரது சாதனை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் கலந்து கொண்டவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஜெயபிரகாஷ் கயல்விழி எனும் பெண்ணே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இலங்கையில் கயல்விழி அழகுக் கலை துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவராகும்.

அத்துடன், அவர் பல்வேறுபட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கயல்விழிக்கு நேற்றிரவு வெற்றிக்கான பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சார்பில் பங்கேற்ற அவரின் இந்த சாதனைக்கான அடையாளமாக வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்ப் பெண்ணான கயல்விழி கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like