இலங்கை இராணுவத்தில் இரட்டையர்களால் முதன்முறையாக நடந்த அதிசயம்

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பிரிகேடியர்களான புரக செனவிரத்ன, ஜெயந்த செனவிரத்ன ஆகியோரே கடந்த 6ஆம் திகதி மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.1965 செப்ரெம்பர் 6ஆம் திகதி பிறந்த இரட்டைச் சகோதரர்களான இவர்கள், ஒரே நாளில் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.

ஒரே நாளிலேயே- தமது 53ஆவது பிறந்த நாளன்று மேஜர் ஜெனரல்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தில் பல்வேறு பதவி நிலைகளிலும், பிரதேசங்களிலும் பணியாற்றியுள்ள செனவிரத்ன சகோதரர்கள், பலவேகய-1, வன்னி விக்ரம போன்ற விடுதலைப் புலிகளிற்கு எதிரான.இராணுவ நடவடிக்கைகளில் பணியாற்றியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like