இன்றைய ராசிபலன் 15-09-2018

மேஷம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் கவனம் தேவை. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

ரிஷபம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். ஆனால், திடீர் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் எளிதாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

கடகம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை குடும்பம் தொடர்பான முக்கிய விஷயத்தில் உங்கள் ஆலோசனை கேட்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த சலுகை தள்ளிப் போகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி: மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், கணவன் – மனைவிக்கிடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதரர்களை அரவணைத்துச் செல்லவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்றசெலவு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்துடன் பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கத்தான் செய்யும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு: தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் மனதில் சற்று சோர்வு உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் உதவியும் உண்டு; உபத்திரவமும் உண்டு. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களிடம் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் பொறுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்: வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்: மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அலுவலகத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை உடனே நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: இன்று மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். ஆனால், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உறவினர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு பிரசித்திப் பெற்ற கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை விமர்சித்துப் பேசினாலும் பொறுமை காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like