இன்றைய ராசிபலன் 05-10-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷபம்: பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனமாக இருக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கிடைத்துவிடும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

கடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாக வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமையுடன் எதிர்கொண்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்..பொறுமையைக் கடைப்பிடித்தால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு: உற்சாகமான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக் கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவர். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.