வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு! 5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பிரதேசங்களை சேர்ந்தவர்களிடம் ஐந்து கோடி ரூபா பணம் கொள்ளையடித்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பொலிஸாருக்க கிடைத்த தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டி, மாத்தறை, ரம்புக்கனை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணத்திற்கு மேலதிகமாக வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக் கொண்டு அந்த வாகனத்தை திரும்பி வழங்காமல் மோசடி செய்துள்ளதாக சந்தேக நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு மோசடி செய்த 4 மோட்டார் வாகனங்கள் மற்றும் ஜீப் வண்டி ஒன்று சந்தேக நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை, பினவத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான முதலிகே தோன் சமந்த அல்லது இத்தாலி சமன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like