நீர்கொழும்பு பாடசாலையில் வெடிகுண்டு? பதற்றத்தில் பதறி ஓடிய மாணவிகள்

நீர்கொழும்பு, நிவுஸ்டட் மகளீர் பாடசாலை எல்லையில் வெடி குண்டு ஒன்று உள்ளதாக மர்ம தொலைபேசி ஒன்று கிடைத்தமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 8.15 மணியளவில் இந்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

20 நிமிடங்களுக்குள் பாடசாலையில் உள்ள மாணவிகள் உட்பட அனைவரையும் வெளியேற்றி கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் செய்தி பெற்று கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில்அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என தெரிவித்து ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னர் பாடசாலைக்கு வந்த விமானப்படை, இராணுவப்படை, வெடிகுண்டு செயலிழக்கும் குழு, பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிது அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்த போது கல்வி அதிகாரி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அங்கு வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று குறித்த பாடசாலையில் பரிசு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.