அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்!!

அமெரிக்காவில், இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான செயற்பாடு தொடர்பில் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை வைத்தியரின் கண்கானிப்பில் உள்ள Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலை மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் காணப்பட்ட Rock hill health south சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலையாக காணப்பட்ட இந்த வைத்தியசாலை மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலையாக வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுடன் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும், அனைத்து பிரிவுகளிலும் சிறந்த வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தெரிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக அதிக நோயாளர்களை குணப்படுத்தி திருப்பி அனுப்பிய வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை மாறியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தில் உள்ள திறமை, ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வைத்தியசாலையிலுள்ள வசதிகள் காரணமாக இந்த வைத்தியசாலை முதலிடத்தை பிடித்துள்ளது.

இலங்கை வைத்தியரான மாலிக்கா ஜயசூரியவின் செயற்பாடு மற்றும் ஆலோசனையின் கீழ் குறித்த வைத்தியசாலை இந்த அளவிற்கு மாற்றமடைந்துள்ளது.

அத்துடன் நோயாளர்களிடம் சிறந்த வைத்தியராக மாலிக்கா பெயர் பெற்றுள்ளார். அவர் பேராதனை மற்றும் ருகுணு வைத்திய பீடத்தில் கற்கை நெறிகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலி வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலைகளிலும் மாலிக்கா பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் மாலிக்கா பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.