கிளிநொச்சி டிப்போ சந்தியில் பெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது…

சிவில் பாதுகாப்பு படையினர் பணிபுரியும் பண்ணைகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பும் முன்பள்ளி ஆசிரியர்களை வட மாகாண கல்வி அமைச்சரும் கோருவதாக கூறி இன்றைய தினம் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிபவர்களை வைத்து இராணுவத்தினரது ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள அரச மற்றும் தனியார் நிவிடுவிப்புத் தொடர்பில் கடந்த 20ம் திகதி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் , கூட்டமைப்பினர் , படையினர் , வனவளத் திணைக்களத்தினர் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் பங்கு கொண்ட கூட்டத்தின்போது உரையாடப்பட்டது.
இதில் படையினர் வசமுள்ள நிலங களின் விபரத்தினை பிரதேச செயலக ரீதியாக ஏக்கர் அளவில் கூட்டமைப்பால் சமர்ப்பித்து அவற்றினை விடுவிக்குமாறு கோரியிருந்தனர். அதற்குப் பதிலளித்த இராணுவத்தினர் இதில் பண்ணைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பண்ணைகளை இராணுவம் வைத்திருக்கவில்லை. அவை சிவில. பாதுகாப்பு பிரிவினரிடமே உள்ளது அவர்கள் தனியான பிரிவு எனக் கூறியிருந்தனர். எந்தப் பிரிவானாலும் பண்ணைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடித் தொடர்பு பட்டவை அவையும் விடப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருந்த்து.
இதனை காரணம் காட்டி பண்ணைகளை கூட்டமைப்பினர் பறித்து மாகாண சபையிடம் கையளிக்க முயல்கின்றனர் அவ்வாறானால் நீங்களே பாதிப்படைவீர்கள் என தவறாக கூறியுள்ளதோடு இதற்கு முன்பள்ளி ஆசிரியர்களையும் இணைப்பதற்காக
வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ளார் என கூறப்பட்டே இன்றைய போராட்டத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.


இதற்காக சிவில் பாதுகாப்பு பிரிவினரால் பெரும் எடுப்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. கல்வியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தவும் மக்களின் வாழ்வாதார மையங்களில் தொடர்ந்தும் இலாபம் அடையும் நோக்கத்திலேயே படையினர் செயல்படுகின்றமையே இதன் மூலம் தெரிவதாக சுட்டிக்காட்டப்படுவதோடு மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சிக்கு ஆரம்ப கல்வியும் முக்கியம் எனவும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல முன்பள்ளி ஆசிரியர்கள் சேராத இடல் சேர்ந்தமையும் இதற்கு கா.தம் என மூத்த கல்வியாளர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.