கொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..!

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழும் நாய்கள் மற்றும் பூனைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நகரை அண்டி வாழும் நாய்கள் மற்றும் பூனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு கருத்தடை திட்டம் ஒன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றனது.

பொது மக்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பூனைகளுக்கும் கருத்தடை திட்டம் ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவன சூழல்களில் தொடர்ச்சியாக இத்தகைய விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.