தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உடவலவ பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வழமையாக நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையின் மூலம் உதவித் தொகைக்கான மாணவர்களை தெரிவு செய்வதற்கும், தரம்வாய்ந்த பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு தனியாக வேறு ஒரு பரீட்சையை நடாத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் போட்டித் தன்மை குறைவடைவதாகவும், இது குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாடசாலை நடைபெறும் காலத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்