வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, ரூபா 173.38 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளி்க்கிழமை அமெரிக்க டொலரின் பெறுமதி ரூபா 172.99 ஆக இருந்தது. இன்று ரூபாவின் மதிப்பு, மேலும், ரூபா 0.39 ஈனால் குறைவடைந்துள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதியை வலுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.