இலங்கை இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய ஆபிரிக்காவின் அதிசயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகை இரத்தினக் கற்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் ருவன்டோவில் இருந்து இந்த இரத்தினக் கற்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இரத்தினக் கற்களை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதான பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இளம் வர்த்தகர் என கூறப்படுகின்றது.

இவர் தனது வயிற்றுக்குள் மறைத்த நிலையில் 329 கரட் நிறையுடைய இரத்தின கற்களை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்காவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இரத்தினக் கல் வகையை சேர்ந்த கற்களே இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.