அமைச்சரவையில் பங்கேற்க சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையில் பங்கேற்குமாறு சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூக் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவனாந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கும் இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடாளுமன்றில் 96 ஆசனங்களை மட்டும் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 105 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தம் பக்கம் இழுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முயற்சித்துள்ளது.