கொழும்பில் மற்றுமொரு குழப்பம்! ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை?

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த வளாகத்தில் இருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அர்ஜூன ரணதுங்கவின் மெய்பாதுகாவலர்களில் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமாக முன்னாள் அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அவரை சட்டத்தின் முன் நிறுத்த தவறினால், நாளை முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என பெற்ரோலியம் வர்த்தக தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படும் என ஊடக பேச்சாளர் எச்சரித்துள்ளார்.