பல அவதாரங்கள் எடுக்கவுள்ள மஹிந்த! புதிய அமைச்சரவை இன்று

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அதரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பாதுகாப்பு, நிதி, சட்டம் ஒழுங்கு, வெளிவிவகாரம், பொதுநிர்வாகம், ஊடகம், சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சுக்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமராக பதிவியேற்கும் மஹிந்த ராஜபக்சவிடம் புத்த சாசனம், சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட அமைச்சுக்கள் கையளிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.